Header Ads Widget

இரட்டை அடுக்கு ரயில் பாலக்காட்டுக்குப் பதிலாக, பொள்ளாச்சி, உடுமலை வழியாக பழனி வரை நீட்டிக்க கோரிக்கை


கோவை-பெங்களூரு இடையே டபுள் டெக்கர் ரயிலான உதய் எக்ஸ்பிரஸ் பல நாட்களாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை பாலக்காட்டுக்குப் பதிலாக, பொள்ளாச்சி, உடுமலை வழியாக பழனி வரை நீட்டிக்க வேண்டுமென்று பொள்ளாச்சி, திண்டுக்கல் எம்.பி.,க்கள் சார்பில் ஏற்கனவே தெற்கு ரயில்வே பொது மேலாளருக்குக் கடிதம் எழுதியிருந்தனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி வழியாக பாலக்காட்டுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக தெற்கு ரயில்வே சார்பில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதற்கான சோதனை ஓட்டமும் 3 நாட்கள் முன்னர் நடைபெற்றது.

உதய் இரட்டை அடுக்கு ரயிலை பாலக்காடுக்கு நீட்டித்துள்ளதால் கோவை உள்ளிட்ட தமிழகப் பகுதி மக்களுக்கு அதிகளவில் ஒதுக்கீடு குறையும் என பயணிகள் சங்கம் சார்பில் கூறப்படுகிறது. இதனால் சோதனை ஓட்டம் மட்டுமே முடிந்துள்ளதால் இந்த ரயிலை பழனிக்கு இயக்க வேண்டும் என்று மக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த கோரிக்கையை தென்னக ரயில்வே பரிசீலிக்குமா ?