Header Ads Widget

போத்தனுர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் - ஏப்ரல் 23ல் ரயில் சேவையில் மாற்றம்


போத்தனுர் ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள ரயில்வே பொறியியல் பணிகள் காரணமாக ஏப்ரல் 23ம் தேதி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

போத்தனுர் - கோவை இடையே ரத்து.

  • வண்டி எண் 06458 சோரனுர் - கோயம்புத்தூர் ரயில், போத்தனுர் ரயில் நிலையம் வரை மட்டுமே இயங்கும். இந்த ரயில் போத்தனுர் - கோவை இடையே ரத்து செய்யப்படுகிறது.

பொள்ளாச்சி - கோவை இடையே ரத்து | பொள்ளாச்சி - போத்தனுர் சிறப்பு ரயில்.

  • வண்டி எண் 16722 மதுரை - கோயம்புத்தூர் விரைவு ரயில், பொள்ளாச்சி ரயில் நிலையம் வரை மட்டுமே இயங்கும். அதே சமயம் பொள்ளாச்சியில் இருந்து போத்தனுர் நிலையத்திற்கு 12 மணிக்கு ஒரு சிறப்பு ரயில் புறப்படும். இந்த ரயில் கிணத்துக்கடவு நிலையத்தில் நின்று செல்லும்.

கோவை - போத்தனுர் இடையே ரத்து.

  • வண்டி எண் 16608 கோவை - கண்ணூர் விரைவு ரயில், கோவை - போத்தனுர் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் போத்தனுர் நிலையத்தில் இருந்து பகல் 2.03க்கு புறப்படும்.

கோவை புறக்கணித்து மாற்றுப்பாதையில் செல்லும் ரயில்கள் விவரம்.

  • 13352 அழப்புழா - தன்பாத் விரைவு ரயில், ஏப்ரல் 23ம் தேதி கோயம்புத்தூர் ரயில் நிலையத்திற்கு வராது. இந்த ரயில் போத்தனுர் ரயில் நிலையத்தில் இருந்து பகல் 12:20க்கு புறப்பட்டு திருப்பூர் நோக்கி செல்லும்.
  • 13678 எர்ணாகுளம் - பெங்களூர் இன்டர்சிட்டி ரயிலும் ஏப்ரல் 23 தேதி கோயம்புத்தூர் ரயில் நிலையத்திற்கு வராது. இந்த ரயில் போத்தனுர் ரயில் நிலையத்தில் இருந்து பகல் 12:50க்கு புறப்பட்டு திருப்பூர் நோக்கி செல்லும்.