Header Ads Widget

தெற்கு ரயில்வேயில் ரூ.7,100 கோடியில் மேம்பாட்டு பணிகள்


நாடு முழுவதும் ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் 1,309 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதில் தெற்கு ரயில்வேயில் மொத்தம் 116 நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை ரூ.7,100கோடியில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதன்படி, தென்னக ரயில்வேயில் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 25 ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணி துரிதமாக நடைபெற்று வருகின்றன..

2-வது கட்டமாக 44 ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு, மேம்பாட்டு பணிகளுக்கு கடந்த மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. பல்வேறு நிலையங்களில் இப்பணி தற்போது முழுவீச்சில் தொடங்கியுள்ளது.

தெற்கு ரயில்வேயில் கடந்த நிதி ஆண்டில் (2023-24) அம்ரித் பாரத் நிலையங்கள் தொடர்பான பணிகள் நன்கு முன்னேற்றம் அடைந்துள்ளன.