Header Ads Widget

திருநெல்வேலி - பெங்களூர் எலஹங்கா இடையே வாராந்திர சிறப்பு ரயில் - மதுரை, கரூர், நாமக்கல், சேலம், திருப்பத்தூர் வழியாக இயக்கம்


கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், திருப்பத்தூர், பங்கார்பேட்டை மற்றும் கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையங்களில் இரு மார்க்கத்திலும் நின்று செல்லும்.

திருநெல்வேலியில் இருந்து பெங்களூரில் அமைந்துள்ள எலஹங்கா ரயில் நிலையத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

நெல்லையில் இருந்து மே 22, 29, ஜூன் 5 மற்றும் ஜூன் 12ம் தேதிகளில் பிற்பகல் 3.15க்கு புறப்படும் 06045 சிறப்பு ரயிலானது மறுநாள் அதிகாலை 3.15க்கு பெங்களூர் எலஹங்கா ரயில் நிலையம் சென்றடையும்.

மறு மார்க்கத்தில் எலஹங்கா ரயில் நிலையத்தில் இருந்து மே 23, 30, ஜூன் 6 மற்றும் 13ம் தேதிகளில் (ரயில் எண் 06046) அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு அன்றைய தினம் மாலை 6.45க்கு திருநெல்வேலி வந்து சேரும்.

இந்த ரயிலில் இரண்டு அடுக்கு குளிர்சாதன வசதி பெட்டி ஒன்றும், மூன்று அடுக்கு குளிர்சாதன வசதி பெட்டிகள் இரண்டும், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் மற்றும் 5 முன்பதிவில்லா பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும்.


06045 எலஹங்கா சிறப்பு ரயில்நிறுத்தம்06046 திருநெல்வேலி சிறப்பு ரயில்
15.15 புதன்திருநெல்வேலி18.45 வியாழன்
16.13/16.15கோவில்பட்டி16.28/16.30
16.30/16.32சாத்தூர்16.10/16.12
16.53/16.55விருதுநகர்15.48/15.50
17.35/17.40மதுரை15.05/15.10
18.55/18.58திண்டுக்கல்13.47/13.50
20.08/20.10கரூர்12.08/.12.10
20.43/20.45நாமக்கல்11.28/11.30
22.05/22.15சேலம்10.20/10.30
23.50/23.55திருப்பத்தூர்08.32/08.37
01.03/01.05பங்கார்பேட்டை06.15/06.17
01.45/01.50கிருஷ்ணராஜபுரம்05.20/05.25
03.15 வியாழன்எலஹங்கா05.00 வியாழன்