Header Ads Widget

கோவை - மயிலாடுதுறை ஜன சதாப்தி ரயிலுக்கு வந்த சோதனை

 கோயம்புத்தூரில் இருந்து திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை வரை ஜன சதாப்தி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் செவ்வாய் கிழமைகளை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று கரூர் - ஈரோடு இடையில் பெய்த கனமழையில், ரயில் பெட்டிக்குள் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை - கோவை சதாப்தி ரயிலில் இதே போல் மழை நீர் ரயில் பெட்டிகளுக்குள் ஒழுகியது குறிப்பிடத்தக்கது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.