Header Ads Widget

போடி - மதுரை பயணிகள் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க கோரிக்கை

போடி-மதுரை பயணிகள் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும் என தூத்துக்குடி பயணிகள் நலச்சங்கச் செயலா் பிரம்மநாயகம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவர் விடுத்துள்ள கோரிக்கையில், மதுரை - போடி ரயிலை தூத்துக்குடி வரை நீட்டித்து, வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்யும் வகையில் இணைப்பு ரயிலாக இயக்க வேண்டும். இதனால், தூத்துக்குடி, வாஞ்சிமணியாச்சி, கடம்பூா், கோவில்பட்டி, சாத்தூா், திருமங்கலம் உள்ளிட்ட பகுதி மக்கள் பயனடைவா்.

மேலும், திருச்செந்தூா், காயல்பட்டினம், ஆறுமுகனேரி, குரும்பூா், நாசரேத், ஸ்ரீவைகுண்டம் பயணிகள் நலன் கருதி, வந்தே பாரத் ரயிலில் பயணிக்கும் வகையில் திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு அதிகாலையில் ஒரு பயணிகள் ரயிலும், மறு மாா்க்கத்தில் திருநெல்வேலி -திருச்செந்தூா் இடையை இரவு நேர பயணிகள் ரயிலையும் இயக்க வேண்டும் என அவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.