Header Ads Widget

எழும்பூரில் புறநகர் மின்சார ரயில்கள் பயணசீட்டு மையம் இடமாற்றம்


சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை ரூ.735 கோடி மதிப்பில் மறுசீரமைக்கும் பணி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது.

இதன் காரணமாக தற்போது ரயில் நிலைய சீரமைப்பு பணிகள் காரணமாக, மின்சார ரயில் டிக்கெட் பதிவு மையம் தற்காலிகமாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது பூந்தமல்லி சாலையை ஒட்டி, ரயில்வே பாதுகாப்பு படை அலுவலக வளாகத்தில் டிக்கெட் பதிவு மையம் செயல்பட தொடங்கியுள்ளது.

இந்த மையத்தில் தலா 3 முன்பதிவு மற்றும் முன்பதிவில்லாத டிக்கெட் கவுன்ட்டர்கள் செயல்படுகின்றன.