Header Ads Widget

கச்சேகுடா - மதுரை, ஓகா - ராமேஸ்வரம் உள்பட 6 ரயில்கள் திருப்பதி தடத்திற்கு பதிலாக மாற்றுப்பாதையில் இயக்கம்




தென் மத்திய ரயில்வேக்கு உட்பட்ட குண்டக்கல் கோட்டத்தில் அமைந்துள்ள பொம்மசமுத்திரம் ரயில் நிலையத்தில் புதிதாக ரயில் பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை ரயில் நிலையத்தின் இதர தடத்துடன் இணைக்கும் பொறியியல் பணிகள் நடைபெறவுள்ளது.

இதற்காக சில ரயில்களின் சேவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பதி, பகலா, சித்தூர் தடத்தில் இயங்கும் 6 ரயில்களின் வழித்தடம் தற்காலிகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

  1. மே 28 மற்றும் மே 30ம் தேதிகளில் SMVT பெங்களூரில் இருந்து புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக செல்லும் 12836 SMVT பெங்களூர் - ஹதியா விரைவு ரயில், காட்பாடி - மேலப்பாக்கம் - ரேணிகுண்டா தடத்தில் செல்லும். இந்த ரயில் சித்தூர் மற்றும் திருப்பதி ரயில் நிலையங்களில் வழியாக செல்லாது.
  2. மே 27ம் தேதி SMVT பெங்களூரில் இருந்து புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக செல்லும் 12890 SMVT பெங்களூர் - டாடா நகர் விரைவு ரயில், காட்பாடி - மேலப்பாக்கம் - ரேணிகுண்டா தடத்தில் செல்லும். இந்த ரயில் திருப்பதி ரயில் நிலையம் வழியாக செல்லாது.
  3. மே 27ம் தேதி ஹைதராபாத் கச்சேகுடா ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் 07191 மதுரை சிறப்பு ரயில், தோனே, கூட்டி, ரேணிகுண்டா, மேலப்பாக்கம், காட்பாடி வழியாக செல்லும். இந்த ரயில் அனந்தபூர், தர்மாவரம், பகலா, சித்தூர் தடத்தில் இயங்காது.
  4. மே 28ம் தேதி புது டெல்லியில் இருந்து புறப்படும் 12626 புது டெல்லி - திருவனந்தபுரம் 'கேரளா' அதிவேக ரயில், ரேணிகுண்டா - மேலப்பாக்கம் - காட்பாடி தடத்தில் இயங்கும். இந்த ரயில் திருப்பதி மற்றும் சித்தூர் ரயில் நிலையங்கள் வழியாக இயங்காது.
  5. மே 29ம் தேதி காக்கிநாடா டவுன் நிலையத்தில் இருந்து புறப்படும் பெங்களூர் 'சேஷாத்திரி' விரைவு ரயில், ரேணிகுண்டா - மேலப்பாக்கம் - காட்பாடி தடத்தில் இயங்கும். இந்த ரயில் திருப்பதி, பகலா மற்றும் சித்தூர் ரயில் நிலையங்கள் வழியாக இயங்காது.
  6. ஒகா ரயில் நிலையத்தில் இருந்து மே 28ம் தேதி புறப்படும் 16734 ராமேஸ்வரம் விரைவு ரயில், ரேணிகுண்டா - மேலப்பாக்கம் - காட்பாடி தடத்தில் இயங்கும். இந்த ரயில் திருப்பதி ரயில் நிலையம் வழியாக இயங்காது.