Header Ads Widget

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3மணி வரை பராமரிப்பு பணி - 2 ரயில்கள் சிங்கபெருமாள்கோவிலுடன் நிறுத்தப்படும்


செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக சென்னை கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.40 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் புறநகா் ரயில் சிங்கபெருமாள்கோவிலுடன் நிறுத்தப்படும்.

மறுமாா்க்கமாக, பிற்பகல் 3.05 மணிக்கு செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரைக்கு புறப்படும் ரயில் செங்கல்பட்டுக்கு பதிலாக சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.