Header Ads Widget

மூன்று வழித்தடங்களில் அதிவேக ரயில்கள் - தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் அறிக்கை


புதிய வழித்தடங்களில் ரயில் சேவை மற்றும் ஏற்கனவே உள்ள வழித்தடங்களில், அதிவேக ரயில் வழித்தடங்களை இயக்க ரயில்வே துறைக்கு பரிந்துரை செய்ய உள்ளது.


அதன்படி, ஏற்கனவே உள்ள ரயில் வழித்தடங்களுடன் இணைக்கப்பட வேண்டிய புதிய இடங்களை கண்டறியவும், ரயில் வழித்தடத்தை மேம்படுத்தவும், 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம், தனியார் நிறுவனம் வாயிலாக ஆய்வு மேற்கொண்டது.

புதிய வழித்தடங்களில் ரயில் சேவை மற்றும் ஏற்கனவே உள்ள வழித்தடங்களில், அதிவேக ரயில் வழித்தடங்களை இயக்க ரயில்வே துறைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய உள்ளது.

அதன்படி, ஏற்கனவே உள்ள ரயில் வழித்தடங்களுடன் இணைக்கப்பட வேண்டிய புதிய இடங்களை கண்டறியவும், ரயில் வழித்தடத்தை மேம்படுத்தவும், தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம், தனியார் நிறுவனம் வாயிலாக ஆய்வு மேற்கொண்டது.

அதில் புதிய வழித்தடங்கள் தேவை மற்றும் தற்போதைய வழித்தடங்களின் வேகம் அதிகரித்தல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த ஆய்வின் அறிக்கையை தமிழக அரசிடம் சமீபத்தில் சமர்ப்பித்தது.

இதில் சென்னை - மதுரை, சென்னை - கோவை மற்றும் மதுரை - ஓசூர் ஆகிய மூன்று வழித்தடங்களில் அதிவேக ரயில்கள் இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்த புதியவழித்தடங்களை அமைக்க காலம் மற்றும் நிதியும் அதிகம் தேவைப்படும் எனவும். இதனை தவிர்க்க தற்போதைய வழித்தடங்களில் உள்ள வளைவுகளை நேரான பாதையாக மாற்றி அமைப்பதன் மூலம் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது.