Header Ads Widget

ஏப்ரல் 21ல் நெல்லையில் இருந்தும், ஏப்ரல் 22ல் சென்னையில் இருந்தும் சிறப்பு ரயில்கள்


திருநெல்வேலி - சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

வண்டி எண் 06790 திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், ஏப்ரல் 21ம் தேதி இரவு 10.45க்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.15க்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.

மறு மார்க்கத்தில் வண்டி எண் 06789 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில், ஏப்ரல் 22ம் தேதி பகல் 12.45க்கு புறப்பட்டு மறுநாள் இரவு 12.30க்கு திருநெல்வேலி சென்றடையும்.

இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் இரு மார்க்கத்திலும் நின்று செல்லும்.

அதே சமயம் திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் திண்டிவனம் மற்றும் மேல்மருவத்தூர் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

இந்த ரயிலின் அட்டவணை ;

06790 Tirunelveli - Chennai EgmoreStation06789 Chennai Egmore - Tirunelveli
22.45 (Sunday)Tirunelveli00.45 (Tuesday)
23.38/23.40Kovilpatti23.13/23.15
23.53/23.55Sattur22.58/23.00
00.28/00.30Virudhunagar22.38/22.40
01.25/01.30Madurai21.55/22.00
02.23/02.25Dindigul20.23/20.25
04.05/04.10Tiruchchirappalli18.20/18.25
06.13/06.15Viddhachalam16.00/16.02
07.15/07.20Villupuram15.15/15.20
07.52/07.55Tindivanam---
08.18/08.20Melmaruvathur---
08.53/08.55Chengalpattu13.43/13.45
09.23/09.25Tambaram13.13/13.15
10.15 (Monday)Chennai Egmore12.45 (Monday)